தாலிபான்கள் அட்டகாசம்: இளம் பெண் மூக்கை அறுத்து அவமானம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அங்கு பெண்களுக்கு சுதந்திரம் என்பதே கிடையாது. இதை நிரூபிக்கும் வண்ணம் அங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் பீபி ஆயிஷா (18). இவருக்கு விருப்பமில்லாத ஒருவருடன் நிச்சயம் செய்திருந்தனர். ஆண் ஆதிக்க நாட்டில் பெண்களின் விருப்பம் முக்கியம் இல்லை. இதனால், திருமணம் செய்து கொள்ள இஷ்டம் இல்லாததால் ஆயிஷா வீட்டை விட்டு வெளியேறினார்.
கடந்த 10 மாதங்களாக பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். இந்த செய்தி அறிந்த தாலிபான் தீவிரவாதிகள் அந்த விடுதிக்கு வந்து அவரை இழுத்துச் சென்றனர்.
பிறகு அவர்கள் ஆயிஷாவின் மூக்கை அறுத்து அசிங்கப்படுத்தினர். இதனால் அவர் கூனிக் குறுகி வீட்டுக்குள்ளேயே இருந்தார்.
இந்நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் அவரின் மூக்கு அறுபட்ட நிலையிலான புகைப்படத்துடன் கூடிய பேட்டி வெளியானது. இந்த செய்தியைப் படித்த உலக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மூக்கு அறுபட்ட ஆயிஷாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. எனவே, அவர் கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தனக்கு ஏற்பட்ட இந்த அவலம் வேறு எந்த பெண்ணிற்கும் ஏற்படாமல் இருக்கவும், தாலிபான் தீவிரவாதிகளின் அக்கிரமங்களை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவரவும் புகைப்படத்துடன் கூடிய பேட்டியை அளித்ததாக ஆயிஷா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications