வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மும்முனைப் போராட்டம்-டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: திமுக கூட்டணி அரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களுக்கு தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மும்முனைப் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அ.தி.மு.க. தலைமையில் மெகா வெற்றிக் கூட்டணி அமைவதற்கு ஜெயலலிதா முயற்சி எடுத்து வருவதையும், அந்த கூட்டணியில் முதன் முதலாக புதிய தமிழகம் கட்சியை இடம் பெற செய்ததையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அ.தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு மட்டும் அல்ல, எல்லா கட்சிகளுக்கும் நியாயமான இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட தி.மு.க. தவிர, தொல்.திருமாவளவன் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் சேரவேண்டும்.
2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நிலமற்ற ஏழை மக்களுக்கு குடும்பத்திற்கு தலா இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் வழங்கும் என்றும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 3 சென்ட் வீட்டுமனை வழங்கும் என்றும் வாக்குறுதி அளித்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இன்னும் 6 மாத காலத்தில் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் மும்முனை போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். 2011-ம் ஆண்டு ஜனவரிமாதம் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு தேர்தல் சிறப்பு மாநாடாக நடத்தப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி கூட்டணி கட்சி தலைவர் ஜெயலலிதாவை அழைப்போம்.
மின் கட்டண உயர்வை கண்டித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து புதிய தமிழகம் போராட்டம் நடத்தும். ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க. இளைஞர் அணியினர் நடத்திய போராட்டம் விநோதமானது. இப்படிப்பட்ட போராட்டம் தொடருமானால் புதிய தமிழகம் எதிர் போராட்டம் நடத்தும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications