சோராபுதீன் என்கவுன்டர் வழக்கு-2 நாள் சிபிஐ காவலில் அமீத் ஷா
Subscribe to Oneindia Tamil

அமீத் ஷாவை விசாரணைக்கு ஒப்படைக்கக் கோரி சிபிஐ கோர்ட்டில் சிபிஐ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த சிபிஐ கோர்ட் 2 நாள் காவலை அனுமதித்து உத்தரவிட்டது. இதையடுத்து இன்று அமீத் ஷாவை சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணைக்காக அழைத்துச் சென்றது.
சபர்மதி சிறைக்கு இன்று அதிகாலையில் சென்ற சிபிஐ குழுவினர் ஷாவை அழைத்துச் சென்றனர். அவர்களுடன் மருத்துவர் குழுவும் சிறைக்குச் சென்று ஷாவை பரிசோதனை செய்தது. பின்னர் அவரை கூட்டிச் சென்றனர்.
விசாரணையை வீடியோவில் பதிவு செய்யவேண்டும் என அமீத் ஷா தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்து விட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications