யு.எஸ். தீவிரவாதப் பட்டியலில் ஹூஜி-பொருளாதாரத் தடை
வாஷிங்டன்: அமெரிக்காவின் தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூஜி தீவிரவாத அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் வரிசையில் இதை சேர்த்துள்ள அமெரிக்கா அந்த அமைப்புக்கு பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.
ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற ஹூஜி தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்திலும் இது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்தியாவைக் குறி வைத்து பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் முகம்மது இலியாஸ் காஷ்மீரி. இவருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதையடுத்து தற்போது ஹூஜி அமைப்புக்கும், காஷ்மீரிக்கும் தடை விதித்துள்ளது அமெரிக்கா.
இந்தியாவில் ஹூஜி அமைப்பும், காஷ்மீரியும் பல தீவிரவாத செயல்களை நிகழ்த்தியுள்லனர். ஹைதராபாத்தில் 2007ல் மசூதியில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 2007 மார்ச்சில் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பு. அதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
மும்பையில் நடந்த பயங்கரவாத சம்பவத்திலும் கூட காஷ்மீரிக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி பல சம்பவங்களிலும் காஷ்மீரிக்கும், ஹூஜிக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தபோதும் அதுகுறித்து அமெரிக்கா கவலைப்படவில்லை. ஆனால் டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கும், ஹூஜிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிய வந்ததைத் தொடர்ந்து தற்போது ஹூஜியை அமெரிக்கா தீவிரவாத இயக்கமாக் அறிவித்து தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து ஐ.நா.வும் ஹூஜி மற்றும் காஷ்மீரிக்குத் தடை விதித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications