கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
கோவில்பட்டி: கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானான்.
கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் அன்வர் பாட்ஷா. நேற்று மதியம் 1 மணிக்கு நண்பர்களுடன் இவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்குள்ள பாழைடந்த கிணற்றுக்குள் பந்து விழுந்தது. அதை எடுக்க சிறுவன் அன்வர் பாட்ஷா படிகள் வழியாக கிணற்றுக்குள் இறங்கினான். அப்போது தவறி தண்ணீரில் விழுந்த அவன் நீ்ச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தான்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த கிணற்றுக்குள் இறங்கி சிறுவனின் உடலைத் தேடினர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வேலாயுதபுரம் மெயின்ரோட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் மாரிராஜ், எஸ்.ஐ. கிருபா, கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியலால் கோவில்பட்டி-சாத்தூர் ரோட்டில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை 5 மணி வரை தேடியும் சிறுவனின் உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து தூத்துக்குடியி்ல் இருந்து முத்துகுளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications