பி.இ. மாணவர்கள் திடீர் போராட்டம்: கல்லூரிப் பேருந்துகள் சேதம்
திருப்போரூர்: திருப்போரூர் அருகில் உள்ள பாலாஜி பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று காலை திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். அப்போது கல்லூரிப் பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
திருப்போரூரை அடுத்த தண்டலத்தில் உள்ளது பாலாஜி பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை, பேராசிரியர்கள் இல்லை, அலுவலக ஊழியர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலை மாற வேண்டும், கல்லூரி முதல்வரையும், நிர்வாக அதிகாரியையும் மாற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது கல்லூரி பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. கல்லூரிப் பலகைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
திருப்போரூர் மாமல்லபுரம் சாலையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து மாணவ மாணவிகள் கூறியதாவது:
இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகளும், ஆசிரியர்களும் இல்லை. மாணவ மாணவிகளை மதிக்காமல் மோசமாக நடத்துகின்றனர். எங்களை மட்டுமின்றி எங்கள் பெற்றோர்களையும் உதாசினப்படுத்துகிறார்கள். கல்லூரி முதல்வரையும், நிர்வாக அதிகாரியையும் மாற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. அதனால் தான் போராட்டம் நடத்துகின்றோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அவர்கள் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications