திருமண சடங்கில் குறி தவறி தந்தை உள்ளிட்ட 3 பேரை சுட்டுக் கொன்ற மணமகன்

Subscribe to Oneindia Tamil

அங்காரா: அன்மையில் தான் மணமகள் துப்பாக்கியால் சுடுவது போன்று போஸ் கொடுக்கப் போய் போட்டோகிராபர் மீது குண்டு பாய்ந்து அவர் இறந்தார். தற்போது இதே போன்று இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

துருக்கியில் உள்ள தென் கிழக்கு மாகாணமான காஷியன்டிப் பகுதியில் உள்ளது அகாகோஷ் என்ற கிராமம். அங்கு நேற்று ஒரு திருமணம் நடந்தது. அங்கு திருமணத்தின் போது, மணமகன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் சடங்கு உள்ளது. எனவே, மணமகன் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

திருமண படபடப்பில் இருந்த அவரின் குறி தவறியது. இதையடுத்து அவர் வானத்தில் சுடுவதற்கு பதிலாக திருமண விழாவிற்கு வந்தவர்களின் மீது சுட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினர்.

இதில் மணமகனின் தந்தை, உறவுக்கார பெண்கள் 2 பேர் உள்ளிட்ட 11 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தந்தையும், 2 பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணமகனை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+