தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது: த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர்
தென்காசி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெட்டுப் போய் விட்டது என்று கூறியுள்ளார் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி.
தென்காசியி்ல் த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. குற்றம் செய்தவர்களுக்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் பேரமும் நடந்து வருகிறது. மேலும் காவல்துறை மிகவும் கேவலமாக உள்ளது.
பல முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்த பின்பும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இவைகளை வலியுறுத்தியும், த.மு.மு.க.வினர் மீது வேண்டுமென்றே பல்வேறு சம்பவங்களில் தொடர்பு படுத்தி வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி கோரிக்கை பேரணி தடையை மீறி நடத்துவோம்.
நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கை மீறும் விதமாக செயல்பட்டு வருகிறார் என்பதை கூடன்குளம் ஐ.பி. கண்காணித்து வருகிறது. வரும் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் ஜனநாயக விரோதத்தை கண்டித்து அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டுளளது என்று அவர் கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications