காமன்வெல்த் ஊழல்-விசாரணையை மேலும் தீவிரமாக்க அமலாக்கப் பிரிவு முடிவு
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு நடத்தியுள்ள மிகப் பெரிய அளவிலான ஊழல்கள் குறித்து சரமாரியாக செய்திகள் வெளியாகி வருவதால் இதுகுறித்த விசாரணையை அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தவுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்த பல்வேறு அமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் போட்டி ஏற்பாடுகளில் பெரிய அளவில் ஊழல்கள் செய்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறையும், மத்திய கணக்கு தணிக்கைத் துறையும் கண்டுபிடித்து வெளிப்படுத்தியது. இதையடுத்து போட்டி ஏற்பாட்டுக் குழுவில் இருந்து இணை இயக்குனர் டி.எஸ்.தர்பாரி நீக்கப்பட்டார். இவர் சுரேஷ் கல்மாடியின் மிக நெருங்கிய கூட்டாளி ஆவார்.
நேற்று அவரிடம் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தர்பாரி தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
ஆனால், லண்டனில் காமன்வெல்த் ஜோதி ஓட்டம் தொடக்க விழா நடத்தப்பட்டதில் நடந்த ஊழலில் தர்பாரிக்கு நேரடி தொடர்புள்ளதாக மத்திய அமலாக்கப் பிரிவினர் கூறி வருகிறார்கள். மேலும், காமன்வெல்த் போட்டி ஏற்பாடு ஊழல்களுக்கு இவர்தான் மூலதாரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மீது விசாரணை பிடி இறுகி வருகிறது.
இதற்கிடையே தர்பாரி போல மற்றக்குழுக்கள் பொறுப்பாளர்களும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த அமலாக்க பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் சில ஊழல் பூதங்கள் கிளம்பும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் சுரேஷ் கல்மாடி, போட்டி ஏற்பாடு ஊழல்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று மீண்டும் கூறியுள்ளார். இது குறித்து அவர் பாராளுமன்ற எம்.பி.க்கள் அனைவருக்கும் விரிவான கடிதம் எழுதி உள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இந்த பிரச்சினை எதிரொலித்ததால், போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications