மர்மக் காய்ச்சல் பீதியில் கன்னியாகுமரி மக்கள்: ஜெயலலிதா
சென்னை: மர்மக் காய்ச்சல் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் எந்தவிதமான நோய்க்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை கண்டறியக் கூட முடியாத நிலையில் மருத்துவமனைகள் இயங்குகின்றன.
மக்கள் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்கான நவீன உபகரணங்கள், பரிசோதனைக்கூட வசதிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களின் ரத்த மாதிரிகளை சென்னைக்கு அனுப்பி, இருபது நாட்கள் வரை நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. திமுக அரசின் மெத்தனப்போக்கு காரணமாக இதுவரை பத்து பேர் இது போன்ற மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தகுந்த சிகிச்சை இல்லாததன் காரணமாக, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருவட்டாறு சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மர்மக் காய்ச்சல் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
மர்மக் காய்ச்சலுக்கு மட்டுமல்ல, எந்த நோய்க்கும் சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை தான் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளங்குகிறது. புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, சிறுநீரகப்பிரிவு, இருதய பிரிவு போன்ற சிகிச்சைப் பிரிவுகள் இல்லாமல், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
எலும்பு முறிவு பிரிவில் பிளேட் இல்லை என்ற காரணத்தைக் கூறி அறுவை சிகிச்சை செய்யாமல் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, டயாலிசிஸ் செய்யும் வசதி ஆகியவை இல்லை. இ.சி.ஜி. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் ஆகியவை பெரும்பாலான நாட்களில் வேலை செய்வதில்லை.
இது போதாது என்று மின் தடை வேறு மக்களை அடிக்கடி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இருக்கின்ற ஜெனரேட்டர்களும் இயங்குவதில்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை, விரிவுரையாளர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது. மொத்தத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ வசதி என்பதே இல்லாமல் போய்விட்டது.
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. எனது ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை திறக்க நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு காலம் கடத்தியது. பின்னர், அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பிறகு, சென்ற ஆண்டு தான் ஆயுர் வேத மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டு முதலா மாண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில், இந்த மருத்துவக் கல்லூரியில் ஆய்வு நடத்திய மருத்துவ கவுன்சில், மருத்துவர்கள் பற்றாக்குறை, மருந்தாளுனர்கள் பற்றாக் குறை உட்பட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இதனை ஓராண்டு காலத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், எந்த குறை பாடும் இதுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை. இதன் காரணமாக, இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக போராட்டம் நடத்திய மாணவர்களிடம் நிர்வாகத்தினர் உறுதி அளித்தும், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, மருத்துவமனையையும், மருத்துவக் கல்லூரியையும் சீரமைத்து, மர்மக் காய்ச்சலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கன்னியா குமரி மாவட்டக்கழகத்தின் சார்பில், 12ம் தேதி நாகர்கோவில், கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications