நாவரசு கொடூரப் படுகொலை-இன்னும் முடியாத வழக்கு-இறுதி விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டையே பதை பதைக்க வைத்த மாணவர் நாவரசு படுகொலை வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான இறுதிக் கட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னுச்சாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பின்னர் பணியாற்றினார்.
இவரது ஒரே மகன்தான் நாவரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு நாவரசு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, தலை, கை,கால் என தனியாக பிரித்து சென்னையிலிருந்து பல இடங்களில் போட்டிருந்தனர். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3வது ஆண்டு படித்து வந்த ஜான் டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டார். ராகிங்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தான் சொன்னதை நாவரசு கேட்காததால், அவரை கொடூரமாக கொலை செய்திருந்தார் ஜான் டேவிட்.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. உடனடியாக இதை எதிர்த்து ஜான் டேவிட் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றச்ச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை, சாட்சிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குதான் இதுவரை முடிவுக்கு வராமல் தொடர்ந்து இழுபறியாக உள்ளது. இன்று இந்தமனு விசாரணைக்கு வந்தபோது, வாதாடுவதற்கு 2 நாள் அவகாசம் கேட்டா ஜான் டேவிட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.
இதையடுத்து விஜயதசமி விடுமுறைக்குப் பின்னர் வழக்கை ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications