69% இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு

வாய்ஸ் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து இந்த அமைப்பு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தது. இந் நிலையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுமதித்து கடந்த ஜூலை 13ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இந்த அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்த அமைப்பு தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தான், 69 சதவீத இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அது அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முடியாது. ஆனாலும் தமிழக அரசின் 1993ம் ஆண்டு இடஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஒரு சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்று 2007ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் 1993ம் ஆண்டிலிருந்தே இந்த அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்து வந்தது. அதில் விடுக்கப்பட்ட கோரிக்கைப்படி தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் கூடுதலான இடங்களுக்கு சமமான இடங்கள் பொதுப் பட்டியலிலும் அதிகரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில்தான் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை ஆதாரங்களின் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு தெரிவிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு அளவை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ப மாநில அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி வாய் கன்ஸ்யூமர் கேர் கவுன்சில் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications