காடுவெட்டி குருவை கூலிப்படை மூலம் கொல்ல சதி: ராமதாஸ்
சென்னை: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீசார் தொடர்ந்துள்ள வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கையே என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
இது குறித்து பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு ஜூலை 28ல் தமிழகம் முழுவதும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய குரு, ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்கள் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடியதையும், அதனால் அவர்கள் தனி இட ஒதுக்கீடு பெற்றதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஆனால், வன்னியர் மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடும் வகையில் பேசினார் எனக் கூறி, 4 வெவ்வேறு பிரிவுகளில் குருவின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குருவை கூலிப்படை மூலம் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், காவல் துறைதான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது. கூட்டணி குறித்து நிறுவனர் ராமதாஸ் முடிவெடுப்பதற்கான அதிகாரம் கடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாகக் குழுவும் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்குகிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், குரு மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இதை நாங்கள் பழிவாங்கும் நடவடிக்கை என்றே கருதுகிறோம்.
குரு மீதான வழக்குகள் காரணமாக திமுகவுடன் கூட்டணி அமைப்பது பாதிக்குமா என்பது பற்றியெல்லாம் எங்கள் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம். இங்கு யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர பகைவரும் இல்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு மாற்று அணி அமைய வேண்டும் என்பது அந்தக் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் பலரது கருத்தாக உள்ளது. அதைத்தான் நான் அண்மையில் மதுரையில் குறிப்பிட்டேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications