ஜெ Vs கருணாநிதி: கோவையைத் தொடர்ந்து திருச்சியில்...!
திருச்சி & ஈரோடு: திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறவுள்ள பிரமாண்ட கூட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் வரும் என்று கூறியுள்ளார் அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கோவையில் அம்மா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களிடையே பெரிய எழுச்சி ஏற்பட்டு உள்ளது. மக்கள் கூட்டத்திலும் தொண்டர்கள் நெரிசலிலும் கோவை மாநகரமே திணறியது.
கோவையில் கூடிய கூட்டத்தை விட வரும் 14 ந்தேதி திருச்சியில் புரட்சித் தலைவி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் குவிவார்கள். திருச்சி ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும். அதிமுகவின் ஆட்சிக்கும் இது வழி வகுக்கும்
என்றார்.
ஜெ. மேடையை ஆய்வு செய்த மாஜிக்கள் குழு:
இதற்கிடையே, திருச்சி அதிமுக கூட்டத்திற்கான ஏற்பாடுகள் வேகம் பிடித்துள்ளன. ஆகஸ்ட் 14ம் தேதி இந்த ஆர்ப்பாட்ட கூட்டம் நடைபெறுகிறது. இதை பிரமாண்டமாக நடத்த கட்சியினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விறுவிறுப்பாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கூட்டத்தில் ஜெயலலிதா முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர். எனவே, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ஓ.பி.
கிட்டதட்ட ஒரு லட்சம் பேரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறாராம்.
பொதுக் கூட்டம் நடத்துவதற்கு திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே ஜி.கார்னர் மைதானத்தை தேர்வு செய்து, அதற்கான அனுமதியை ரயில்வே அமைச்சர் மம்தாவிடம் வாங்கியுள்ளது அதிமுக.
இதையடுத்து கடந்த 6ம் தேதி திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே ஜி.கார்னர் மைதானத்தில், பொதுக்கூட்டத்திற்கான பந்தல் வேலை நடப்பதற்கு முன், சிறப்பு பூமி பூஜை ந டைபெற்றது. பின்னர் திருவாணைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட மேடை 60க்கு 30 என்ற அளவில் (கூட்டுத் தொகை 9 வரும்-இது ஜெயலலிதாவின் ராசி எண்) தயாராகி வருகிறது. தற்போது மேடை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
கருணாநிதியும் திருச்சி வருகை:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி அடுத்த மாதம் 8ம் தேதி திருச்சி வருகிறார். புதிய கலெக்டர் அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
ரூ.12.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் நடந்து வரும் ரூ.169 கோடி மதிப்பிலான, புதிய ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தையும், வெள்ள தடுப்பு பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
மேலும் 10,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
திருச்சி- கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகே அன்பில் தர்மலிங்கம் சிலையையும் திறந்து வைக்கிறார். அன்று இரவு திமுக பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
கோவையில் ஜெயலலிதா ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு திமுக பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
இப்போது ஜெயலலிதா திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலையில் அங்கும் செல்கிறார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications