ஜெயலலிதா ஆட்சி அமைய சிறப்பு யாகம்-பூஜை!
மதுரை: 2011ம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி, தேனி அருகே உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட அதிமுக, செயலாளர் தங்கத் தமிழ்செல்வன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் பால்பாண்டி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் சேரலாதன் உள்ளிட்ட அதிமுகவினர் 27 பேர் உப்புத்துறையில் இருந்து 17 கி.மீ. தூரம் மலை ப்பாதையில் நடந்து சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் சிறப்புப் பூஜை, யாகம் நடத்தினர்.
மதுரை வரும் ஜெ.:
இந் நிலையில் கோவை, திருச்சி கூட்டங்களைத் தொடர்ந்து அடுத்து மதுரைக்கு விசிட் அடிக்கவுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கோவையில் நடந்த பிரமாண்ட கூட்டம் இன்னும் மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருவதால் உற்சாகமடைந்துள்ள ஜெயலலிதா அடுத்து திருச்சியில் ஒரு பிரமாண்டக் கூட்டத்தை கூட்டியுள்ளார். சனிக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அடுத்து மதுரைக்கு செல்லவுள்ளார் ஜெயலலிதா என கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில், தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் செப்டம்பர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் இதற்கு அனுமதி தர மறுத்தது மதுரை மாநகராட்சி. காவல்துறையும் அனுமதி மறுத்தது.
இதையடுத்து அதிமுக சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் தற்போது அனுமதி கிடைத்து விட்டதாம்.
இதையடுத்து திட்டமிட்டபடி செப்டம்பர் 18 முதல் 21 வரை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஒரு நாளில் ஜெயலலிதா வந்து கலந்து கொள்கிறாராம். அந்த சமயத்தில் பிரமாண்ட கூட்டத்தை நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதுகுறித்து ஜெயலலிதாவே விரிவாக அறிவிப்பார் என அதிமுக தரப்பு கூறுகிறது.
நெல்லைக்கும்:
மதுரைக்கு அடுத்தபடியாக நெல்லைக்கும் செல்லவுள்ளார் ஜெயலலிதா எனக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு ஒரு ரவுண்டு போய் வந்துவிட ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
திமுகவும் பொதுக் கூட்டங்கள்:
இந் நிலையில் வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை திமுக அரசின் சாதனையை விளக்கி தெரு முனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக இளைஞர் அணி சார்பில் ஆகஸ்டு 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகள் தோறும் முதல்அமைச்சர் கருணாநிதி அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
வேலூரில் நடைபெறும் கூட்டத்தில் எஸ்.பி. சற்குணபாண்டியன், சரத்பாலா, திண்டுக்கலில் கோவை மு.ராமநாதன், நாமக்கலில் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, குடியாத்தம் குமரன், விழுப்புரத்தில் ரா.வெற்றிக்கொண்டான், கன்னியாகுமரியில் ரகுமான்கான், ஈரோட்டில் கம்பம் செல்வேந்திரன், ராமநாதபுரத்தில் பொன்முத்துராமலிங்கம், திப்பம்பட்டி ஆறுச்சாமி, தேனியில் கே.பி.ராமலிங்கம் எம்.பி, சேலத்தில் கடலூர் புகழேந்தி, திருவண்ணாமலையில் புதுக்கோட்டையில் விஜயா,
கிருஷ்ணகிரியில் ஏம்.ஏ.நூர்ஜகான் பேகம், கனல்காந்தி,
புதுக்கோட்டையில் சங்கரிநாராயணன், குத்தாலத்தில் க. அன்பழகன், திருவாரூரில் கவிதைப்பித்தன், விருதுநகரில் டி எம்.செல்வகணபதி எம்.பி, அரியலூரில் தஞ்சை கூத்தரசன், சாவல்பூண்டியில் சுந்தரேசன், திருநெல்வேலியில் தென்னவன், நாகப்பட்டினத்தில் கோவி. செழியன், திருச்சியில் நெல்லிக்குப்பம் புகழேந்தி, காஞ்சீபுரத்தில் வாகைசந்திரசேகர், தாயகம் கவி, தருமபுரியில் வடக்கு நடிகர் தியாகு, பவானியில் கண்ணன்,
திருவள்ளூரில் புலவர் இந்திராகுமாரி, வி.பி.ஆர். இளம்பரிதி கோவையில் ஈரோடு சு.முத்துசாமி, குமரியில் தாமரைபாரதி, கரூரில் கரூர் சின்னசாமி, ஈரோட்லி இறைவன். தஞ்சையில் தமிழச்சி தங்கபாண்டியன், திருப்பூரில் தீப்பொறி ஆறுமுகம், கடலூரில் நளினி சாரங்கன், தருமபுரியில் தெற்குகரூர் கணேசன், மதுரை புறநகரில் கரூர் முரளி, தூத்துக்குடியில் சேலம் சுஜாதா, மதுரை மாநகரில் டி.எம்.செல்வகணபதி ஆகிய சொற்பொழிவாளர்கள் திமுக அரசின் சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை, தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் வாயிலாக மக்களிடையே விளக்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications