ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்-ஜெய்ராம் ரமேஷ்

நாடாளுமன்றத்தில் மிருக வதை குறித்து பாஜக எம்பி மேனகா காந்தி எழுப்பிய கேளிவிக்கு பதிலளித்த ஜெய்ராம்,
கடந்த 2007ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வவலியுறுத்தப்பட்டது.
ஆனால், தமிழக அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. உண்மையில், ஜல்லிக்கட்டு, தடை செய்யப்பட வேண்டிய ஒரு விளையாட்டு ஆகும்.
ஸ்பெயின் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த காளை சண்டை கூட நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, தமிழகத்தில் ஏன் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க கூடாது?.
சமுதாயத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பழக்க வழக்கங்களை நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எனவே, ஸ்பெயினைப் போல நம் நாட்டிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications