பெரம்பலூர் பாமக கவுன்சிலர் கொலை செய்த தம்பி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பாமக கவுன்சிலர் ஒருவர் அவரது தம்பியால் கொலை செய்யப்பட்டார்.
வேப்பூர் ஒன்றிய பாமக கவுன்சிலராக இருந்தவர் சார்லஸ். இவருக்கும் இவரது சகோதரர் இளவரசனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம்.
கடந்த வாரம் இருவரும் குடித்து விட்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது கவுன்சிலர் சார்லஸ், தம்பி இளவரசனின் முகத்தை பிளேடால் கிழித்துள்ளார்.
இதையடுத்து நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சார்லஸை இளவரசன் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் சார்லஸ் அந்த இடத்திலேயே பலியானார்.
கொலை தொடர்பாக இளவரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications