பிரபல ஆதீன மடத்தில் சிறுவனுக்கு பாலியல் சித்தரவதை?!
நாகை: நாகை அருகே உள்ள பிரபல ஆதீனத்திற்கு சொந்தமான மடத்தில் சிறுவன் ஒருவனுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த முத்து குமார் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து இவரது மனைவி மேனகா, மகன ரோகித் மற்றும் மகள் சந்தியா (பெயர்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்ட்டுள்ளன) ஆகியோர் மயிலாடுதுறையில் உள்ள மேனகாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
மேனகா ஆன்மீகத்தில் ஆதிக ஈடுபாடு கொண்டவர். அங்குள்ள ஒரு பிரபல ஆதீனம் நடத்தும் பாடல் வகுப்புகளில் தனது குடும்பத்தாரோடு கலந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், அவர் ஆதீன வளாகத்திலேயே தனது குடும்பத்தோடு குடியேறிவிட்டார்.
அப்போது, சிறுவன் ரோகித்தை கடினமான வேலைகளை வாங்குவது, நள்ளிரவு நேரத்தில் தோட்டத்தில் மலர் பறித்து வரச் செய்வது போன்ற நவடிக்கைகளால் அந்த சிறுவன் , சென்னையில் உள்ள தனது அத்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை வர விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த சிறுவனை அவரது உறவினர்கள் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அந்த சிறுவனை உடனே திருப்பி அனுப்ப கோரி அந்த ஆதீனம் மடத்திலிருந்தும், சில அரசியல் பிரமுகர்கள் மூலமாக தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.
இந் நிலையில், சிறுவனை அவனது விருப்பத்திற்கு மாறாக, அவனது அத்தைகள் கடத்தி வைத்திருப்பதாகவும், உடனே அவனை மீட்டுத் தருமாறு சிறுவனின் தாய் மேனகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவனது அத்தை ரேவதியின் கணவர் சோமலிங்கத்தையும், இன்னொரு ஆனந்தியின் கணவர் ரமேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந் நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவன் ரோகித் தனக்கு அந்த ஆதீன மடத்தில் பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த உண்மை நிலையை போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications