வன்முறையைக் கைவிட்டு விட்டு பேச்சுக்கு வாருங்கள்-நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு

64வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இது பிரதமர் ஆற்றும் தொடர்ச்சியான 7வது சுதந்திர தின உரையாகும்.
பேச்சைத் தொடங்கும் முன்பு லே பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு பேச்சைத் தொடங்கினார் பிரதமர்.
பிரதமரின் பேச்சில் முக்கியப் பகுதிகள்...
நமது நாட்டின் மிக முக்கிய சவாலாக நக்சலிசம் உருவெடுத்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், அரசுக்கும் இது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதை உறுதியுடன் சந்தித்து அழிப்போம். வன்முறையை யார் கையில் எடுத்தாலும் அவர்களை சட்டம் சும்மா விடாது.
நக்சலைட்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். அதனால் ஒரு பலனும் கிடையாது. பேச்சுவார்த்தைக்கு அவர்கள் முன்வர வேண்டும். அரசுடன் இணைந்து சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.
உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உறுதியுடன் செயல்படுகிறது. நக்சலைட்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும், அந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு செய்யும்.
நக்சல் பாதித்த மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையாக அமல்படுத்தப்படும். மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்துதான் இந்த சவாலை சந்திக்க வேண்டும். ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இதை சமாளித்து ஒடுக்க முடியாது.
பாகிஸ்தானுடன் வலுவான உறவு
பாகிஸ்தானுடன் வலுவான, உறுதியான உறவையே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தான் துண்டாடப்படக் கூடாது என்றும் இந்தியா விரும்புகிறது. ஆனால் இது நடைபெற தீவிரவாதத்தை விட்டு பாகிஸ்தான் விலகிப் போக வேண்டியது அவசியம். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்திலிருந்து பாகிஸ்தான் விடுபடாவிட்டால், பேச்சுவார்த்தை போன்றவற்றில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது.
அண்டை நாடுகளுடன் நமக்கு உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தை போன்ற அமைதியான வழிகள் மூலமே எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்.
காஷ்மீர் வன்முறையால் பலன் இல்லை
காஷ்மீரில் தற்போது நடந்து வரும் வன்முறையால் யாருக்கும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. காஷ்மீரில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் அதைக் கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த இந்தியா என்ற கோட்பாட்டின் கீழ்தான் எதையும் செய்ய முடியும். வன்முறையைக் கைவிட்டு விட்டு இந்த கோட்பாட்டின் கீழ் பேச்சு நடத்த முன்வர வேண்டும்.
காஷ்மீர் தெருக்களில் கடந்த 2 மாதங்களில் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருப்பது மிகவும் வேதனை தருகிறது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் யாருக்கும், எந்தவித சந்தேகமும் இருக்கக் கூடாது.
வன்முறைக் காலங்கள் முடிவுக்கு வர வேண்டும். இதுபோன்ற வன்முறையால் ஒருவருக்கும் லாபம் இல்லை.
இந்திய ஜனநாயகம் உலக நாடுகளுக்கு ஒரு மாபெரும் உதாரணமாக திகழ்கிறது. நமது நாட்டைச் சூழ்ந்துள்ள பல சவால்களை முறியடிக்க நமது படையினர் பேருதவி புரிகின்றனர். அவர்களின் பணியும், வீர தீரமும் போற்றுதலுக்குரியது. அவர்களை நான் சல்யூட் செய்கிறேன்.
காமன்வெல்த் ஊழல்
வரப் போகிற தேசிய திருவிழாவான காமன்வெல்த் போட்டிகளை மக்கள் சிறந்த முறையில் அனுபவித்துக் கொண்டாட வேண்டும். அக்டோபரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நமது நாடு மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஒன்றரை மாதம் நடைபெறப் போகும் இந்தப் போட்டிகளால் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. இது நாட்டுக்கு மட்டுமல்லாமல் டெல்லிக்கும் மிகச் சிறந்த தருணமாகும்.
இதை தேசியத் திருவிழாவாக கருதி நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும். இந்தப் போட்டியை மிகப் பெரிய வெற்றியாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
விலைவாசி உயர்வு குறையும்
மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு விரைவில் கட்டுக்குள் வரும். வேளாண் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் விரைவில் இது சாத்தியமாகும். ஏழை மக்களை உயர்த்துவதில் அரசு முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகிறது.
விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு உணர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. விலைவாசி குறையும், மக்கள் துயரம் குறையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச ஆதார விலையை அரசு கொடுத்து வருகிறது. இருப்பினும் உணவுப் பொருள் விலை உயர்வுக்கு இதுவும் கூட ஒரு காரணமாகியுள்ளது.
சிறுபான்மையினர் நலம்
சிறுபான்மையினர் நலனுக்கு அரசு எப்போதுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளித்து வருகிறது. சிறுபான்மையினரைக் காப்பது அரசின் கடமையாகும். சிறுபான்மையின சமூக குழந்தைகள் நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
சிறுபான்மையினர் உயர் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான இரண்டு தனி கவுன்சில்களை அமைக்கவுள்ளது என்றார் பிரதமர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications