உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு இ-மெயிலில் வந்த கம்ப்யூட்டர் வைரஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உஸ்பெகிஸ்தானுக்கான இந்திய தூதரின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் விபரீதமான கணிணி வைரஸ் இருப்பதால் பாதுகாப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அந்த தூதரின் மெயில் பாக்சை குறும்பர்கள் யாரேனும் பயன்படுத்தி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அந்த ட்ரோஜன் வைரஸ் அதிகாரிகளின் கணிணிகளில் பொருத்தப்பட்டுள்ள ட்ரென்ட் மைக்ரோ ஆன்டி வைரஸ் மென்பொருளையும் தாண்டி வந்துள்ளது.
உள் துறை அமைச்சகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பலருக்கு வந்துள்ள மின்னஞ்சலில் இந்திய தீவிரவாதிகள் பட்டியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ட்ரோஜன் வைரஸ் இருப்பது குறித்து புலன் ஆய்வுத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications