சிறுவன் ஆதித்யா கொலை-பூவரசிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
சென்னை: சிறுவன் ஆதித்யாவை கடத்திக் கொலை செய்து புதுச்சேரிக்குக் கொண்டு போய் சூட்கேஸில் போட்டு விட்டு வந்த இளம் பெண் பூவரசியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி ஜெயக்குமார். இவரது 4 வயது மகன் ஆதித்யா காணாமல் போனான். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சிறுவன் ஆதித்யா கடத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஜெயக்குமாரின் கள்ளக்காதலி பூவரசி கைது செய்யப்பட்டார்.
சிறுவனைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்து புதுச்சேரி செல்லும் பேருந்தில் வைத்து விட்டு வந்து விட்டார் பூவரசி.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூவரசி ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும், பின்னர் சென்னை செஷன்ஸ் கோர்ட்டிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார். இரண்டு கோர்ட்களும் அதை நிராகரித்து விட்டன.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு நீதிபதி மதிவாணன் மனுவை இன்று விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் குமணன், பூவரசி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications