விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: ஸ்ரீபெரும்புதூரில் ஆர்ப்பாட்டம்-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூரில் க்ரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வயலூர், அகரம், உச்சிமேடு, சூராகபுரம், மும்முரகுப்பம், கன்னிகாபுரம், வாசனாம்பட்டு, திருப்பந்தியூர்,
திருமணிகுப்பம், பன்னூர், நரசமங்கலம், கொட்டையூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கிளாய், சிறுகிளாய், பாடிசேரி, ராமாபுரம், வடமங்கலம், பூதேரிபண்டை, மாம்பாக்கம், இருங்குளம், மொளச்சூர்,
திருமங்கலம், கண்டிகை, சோகண்டி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், ஆக மொத்தம், 6,921 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் திமுக அரசு தற்போது வெகு வேகமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்காக, விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய விவசாய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய துர்ப் பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே வேளாண் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இது போன்ற விவசாயிகளுக்கு எதிரான செயல் விவசாய உற்பத்தியை மேலும் குறைக்க வழி வகுக்கும். இது மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை இடிப்புக்கு ஆளாக நேரிடும்.
இதை கண்டித்தும், க்ரீன் பீல்டு விமான நிலையத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சில நாட்களுக்கு முன்பு மேற்படி கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்ற போது, காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது மட்டுமல்லாமல், கடம்பத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் கே. சுதாகர் உட்பட பொதுமக்கள் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த செயலை கண்டித்து நான் ஏற்கனவே அறிக்கை விடுத்திருந்தேன்
இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளுவர் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications