டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-புதிய சலுகைகள்

Subscribe to Oneindia Tamil

Tasmac
சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.4,000ல் இருந்து ரூ.4,500 ஆகவும், விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.2,800ல் இருந்து ரூ.3,200 ஆகவும், உதவியாளர்களின் சம்பளம் ரூ.2,100ல் இருந்து ரூ.2,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

2006ம் ஆண்டு இந்த அரசு பதவியேற்றபின் டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனைப் பிரிவு பணியாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இவர்களுக்கு 2007 ஜூலை மாதம் மற்றும் 2009 ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இவ்விரு ஊதிய உயர்வுகள் மூலம் மாதம் ஒன்றுக்கு ஏற்கெனவே பெற்று வந்ததைவிட மேற்பார் வையாளர்கள் ரூபாய் 1000, விற்பனையாளர்கள் ரூபாய் 800 மற்றும் மதுக்கூட உதவியாளர்கள் ரூபாய் 600 கூடுதலாகப் பெற்று வருகிறார்கள்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் 10 சதவீதமாக வழங்கப்பட்ட போனஸ் மற்றும் கருணைத் தொகையை இந்த அரசு 20 சதவீதமாக உயர்த்தி கடந்த மூன்று வருடங்களாக வழங்கி வருகிறது.

பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட காப்புத் தொகைக்கு முந்தைய ஆட்சியில் வட்டி ஏதும் வழங்கப்படவில்லை. இந்த அரசால் 3.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைமுறையிலிருந்த ஊக்கத் தொகைத் திட்டம், இந்த ஆட்சியில் அனைத்துப் பணியாளர்களும் பயன் பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியில் தான் முதல் முறையாக மேற்பார்வையாளர்களுக்கு மாதாந்திரப் பயணப்படி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆட்சிக்காலத்தில் தான் பணியாளர் இறக்க நேரிட்டால் குடும்ப நல நிதியிலிருந்து வழங்கப்படும் தொகை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உண்மைநிலையை அறிந்திருந்த போதிலும், அரசியல் காரணங்களுக்காகவும், நிர்ப்பந்தங்களுக் காகவும், சில தொழிற் சங்கங்கள் அறிவித்த ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே பங்கேற்றனர்.

தொழிலாளர் நலனில் என்றென்றும் அக்கறை கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பல சலுகைகளை தானாகவே முன்வந்து வழங்கியதைப்போல, பின்வரும் சலுகைகளை தற்போது வழங்கி ஆணையிட்டுள்ளார்.

அவையாவன:

மேற்பார்வையாளர்களின் மாத தொகுப்பு ஊதியம் ரூபாய் 4,000லிருந்து 4,500 ஆகவும், விற்பனையாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூபாய் 2,800லிருந்து 3,200 ஆகவும், மதுக்கூட உதவியாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூபாய் 2,100லிருந்து 2,400 ஆகவும் உயர்த்தப்படும்.

இதனால் 30,000 பணியாளர்கள் பயன் பெறுவர்.

டாஸ்மாக் பணியாளர்களின் காப்புத் தொகைக்கான வட்டி 3.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் வருடம் ஒன்றிற்கு மேற்பார்வையாளர்கள் ரூபாய் 1,250, விற்பனையாளர்கள் ரூபாய் 375, மதுக்கூட உதவியாளர்கள் ரூபாய் 250 கூடுதலாகப் பெற்று பயனடைவர்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை 1.5 சதவீதத்திலிருந்து 1.75 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

காலி அட்டைப் பெட்டி சேதத்திற்கான இழப்பை பணியாளர்கள் மீது சாட்டப்படுவதற்குப் பதிலாக நிர்வாகமே ஏற்கும்.

மதுபான விற்பனைக்குப்பின் கடைகளில் தேங்கும் காலி அட்டைப் பெட்டிகள் பணியாளர்களால் ஒப்பந்ததாரர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்படும் சேதம் சுமார் 2.5 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது தற்போது பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இனி அட்டைப் பெட்டிகள் சேதத்தினால் ஏற்படும் இழப்பை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும்.
இச்சலுகைகள் 1.9.2010 முதல் நடைமுறைக்கு வரும்.

தூண்டுவோருக்குத் துணையாக நிற்காமல், இந்த அரசின் தூய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இந்த அரசு உரிய நேரத்தில் சலுகைகளையும், உரிமைகளையும் அளிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+