வங்கியில் நகைகள் மாயம்: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் உறுதி
வள்ளியூர்: செட்டிகுளம் பாண்டியன் கிராம வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மாயமான சம்பவம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இவற்றை பத்திரமாக மீட்டுத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த வங்கி. இங்கு நடந்துள்ள இச்சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, பொதுமக்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நேற்று இரவு வங்கி அதிகாரிகள் செட்டிகுளம் மக்கள் மத்தியில் கூட்டம் நடத்தினர்.
செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் விஜயன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வங்கியில் வரவு செலவு வைத்த 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வங்கி அதிகாரி பேசுகையில்,
வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளுக்கு வங்கி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்கும். எனவே, பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் நகைகளை இன்னும் ஒருவாரத்தில் திரும்ப கொடுக்கப்படும் என்றார்.
இதனால் பொதுமககள் நிம்மதி பெறுமூச்சு விட்டனர். இதற்கிடையே நகை மதி்ப்பீட்டாளர் ஜெயசகாயசீலனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தும்போது அவர் மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்த பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications