பாக்.குக்கு இந்தியாவால் ஆபத்தில்லை, தீவிரவாதம்தான் பெரும் மிரட்டல்-ஐஎஸ்ஐ கண்டுபிடிப்பு
இஸ்லாமாபாத்: இந்தியாவால் பாகிஸ்தானுக்கு ஆபத்து ஏதும் இல்லை. ஆனால் தீவிரவாதிகளும், தீவிரவாத இயக்கங்களும்தான் பாகிஸ்தானுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளன என்று பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு புதிதாக ஞானோதயம் வந்து கூறியுள்ளது.
கடந்த 63 ஆண்டு கால பாகிஸ்தான் வரலாற்றில் இப்போதுதான் இந்தியா எதிரி இல்லை என்று முதல் முறையாக ஐஎஸ்ஐ கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்றை ஐஎஸ்ஐ அரசுக்கு அனுப்பியுள்ளது. அதில், இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானுக்கு ஆபத்து ஏதும் இல்லை. மாறாக பெருகி வரும் தீவிரவாதமும், தீவிரவாத இயக்கங்களும்தான் பெரும் மிரட்டலாக உருவெடுத்துள்ளன என்று ஐஎஸ்ஐ தெரிவித்துள்ளதாம்.
இருப்பினும் இந்த அறிக்கைக்கு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசின் ஆதரவு உள்ளதா என்பது தெரியவில்லை.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புதான் இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டி விட்டும், வளர்த்தும், தீவிரவாத செயல்களை நிகழ்த்தியும் வருவதாக நீண்ட காலமாகவே இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. மேலும், ஐஎஸ்ஐ அதிகாரிகள் பலருக்கும், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவும் கூட சமீப காலமாக கூற ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவால் நமக்கு ஆபத்தில்லை என்று பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கூறியிருப்பது வியப்பாக உள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications