கனடா வந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சன் சீ கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு கனடா அரசு குடியுரிமை வழங்கி அடைக்கலம் தர வேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சன் சீ என்ற கப்பலில் பிரிட்டீஸ் கொலம்பியா கடற்கரைக்கு இலங்கை தமிழர்கள் 500 பேர் சென்றடைந்தனர். அவர்கள் 500 பேரும் வான்கூவர் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதை தற்காலிகமாக நிராகரித்துள்ளது கனடா அரசு.

இந்நிலையில் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் கனடா அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கடிதத்தில் நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள். தீவிரவாதிகள் அல்ல என்றும் கடிதத்தில் தமிழர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, எம் வி சன் சீ கப்பலில் கனடாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பினர், கனடா பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில். இலங்கை தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் அகதிகளை விடுதலைப்புலிகள் என கூறுவது கவலை அளிக்கிறது.

இந்த அகதிகள், கனடா பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டவர்கள். அவர்களை சட்டத்தின்படி விசாரணை செய்யவேண்டும். கனடா அரசாங்கம், இலங்கை அகதிகள் தொடர்பில் விரைவில், நல்ல தீர்மானத்தை அறிவிக்கும் என தாம் நம்புவதாகவு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கனடா அரசு மீது லிபரல் கட்சி பாய்ச்சல்

இதற்கிடையே, இலங்கையில் இருந்து கனடாவுக்கு வந்த இலங்கை அகதிகள் தொடர்பாக, கனடா அரசு உரிய முறையில் செயற்படவில்லை என, கனடா லிபரல் கட்சியின் தலைவர் மைக்கேல் இனகடீப் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் சன் சீ கப்பல், தாய்லாந்தில் இருந்து இருந்து புறப்பட்டு கனடாவை வந்து சேரும் வரை மூன்று மாதங்கள் பிடித்தன. இந்த நாட்களில் கப்பல் கனடாவை நோக்கியே வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் கனடா ஏன் இந்த விஷயத்தை தீவிரமாக ஆலோசனைக்கு எடுக்கவில்லை.

தற்போது அகதிகள் கனடாவுக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் அவர்களை தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்துடன், விசாரணைகளின் போது இலங்கையின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+