20 வயது மாணவன் கற்பழித்ததால் மனம் உடைந்து 40 வயதுப் பெண் தற்கொலை
புதுச்சேரி: இதோ இன்னும் ஒரு கள்ளக்காதல் சாவு. 20 வயது மாணவனுடன் கள்ளக்காதல் கொண்டிருந்த 40 வயதுப் பெண், அந்த மாணவன் கட்டாயப்படுத்தி கற்பழித்து, அதை பலரிடமும் சொன்னதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் கற்பகவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி அபிராமி சுந்தரி (40). இவர்கள் குறிஞ்சி நகர் 10-வது குறுக்கு தெருவில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகின்றனர்.
இவர்களது கடைக்கு எதிரே வசிக்கும் பாலிடெக்னிக் மாணவரான விஜயக்குமாருக்கும் அபிராமிசுந்தரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பைப் பயன்படுத்தி அபிராமிசுந்தரியை விஜயகுமார் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டாராம்.
அத்தோடு தான் அபிராமி சுந்தரியுடன் உறவு கொண்டதை தனது நண்பர்களிடமும் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் அவரை அடைய முயன்றுள்ளார். இதனால் அவமானம் அடைந்த அபிராமி சுந்தரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாவதற்கு முன்பு அபிராமி சுந்தரி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், என்னுடைய சாவிற்கு நான் கடை வைத்திருக்கும் எதிர் வீட்டில் உள்ளவர்கள் தான் காரணம். என்னுடைய மானம் போனதற்கு அவர்களுடைய மகன்தான் காரணம். அவனால்தான் இந்த முடிவிற்கு வந்தேன். என்னை வலுகட்டாயமாக பலவந்தபடுத்தி கெடுத்து விட்டான்.
வெளியில் சொன்னால் உன்னுடைய மானம்தான் போகும் என்று கூறியே என்னை பலவந்தபடுத்தி கெடுத்துவிட்டான். அவனுக்கு நீங்கள் தான் சட்டபடி தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பின்னர் தனது கணவருக்கு எழுதிய கடிதத்தில், அன்புள்ள என்னுடைய கணவருக்கு நான் உங்களிடம் கூறாமல் தவறு செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். நான் போனபிறகு என்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுங்கள். என்னை மறுபடியும் மன்னியுங்கள் என்று கூறியுள்ளார்.
புகார் பதிவு செய்த போலீஸார் விஜயக்குமாரைக் கைது செய்து, அபிராமி சுந்தரியை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications