தயாநிதி மாறன் வீட்டில் சக வீரரை கொன்ற சிஆர்ப்எப் வீரருக்கு ஆயுள் தண்டனை

தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் சுரேஷ் குமார் மற்றும் கான்ஸ்டபிள் கணேஷ் பாண்டுரங்க சுதர் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கணேஷ் துப்பாக்கியால் சுட்டதில் 8 குண்டுகள் பாய்ந்து சுரேஷ் குமார் உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கில், கணேஷ் பாண்டுரங்க சுதருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன் நேற்று தீர்ப்பளித்தார்.
19 மாதங்களில் 170 ராணுவ வீரர்கள் தற்கொலை:
இந் நிலையில் கடந்த 19 மாதங்களில் 170 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ராஜ்யசபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 2009ம் ஆண்டில் மட்டும் 111 ராணுவ வீரர்கள், அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டில் ஜூலை மாதம் வரை 59 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது போன்ற துரதிஷ்டவசமான சம்பவங்களைத் தடுக்க விடுமுறை எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துதல், ராணுவ வீரர்களுக்கு அவரவர் மதங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களைக் கொண்டு கவுன்சிலிங், ஜவான்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் மற்றும் உணவின் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications