கேரள அறுவடைத் திருநாள், ஓணம்...!
தமிழர்களுக்கு ஒரு பொங்கல், அது போல மலையாள மக்களுக்கு ஓணம். அறுவடைத் திருநாளான ஓணம் இதோ வந்து விட்டது.
மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்கம். அந்த மாதத்தில், திருவோண நட்சத்திரத்தின்போது வருவதுதான் ஓணம் பண்டிகை. இந்த தினத்தில் மன்னர் மகாபலி தங்களது நாட்டுக்கு மீண்டும் வருவதாக ஐதீகம். இதைத் தான் இந்த நாளில் மலையாள மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
பொங்கல் எப்படி நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறதோ, அதுபோல ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரளாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கலந்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
பூக்கோலம் இட்டு, விருந்து வைத்து, படகுப் போட்டிகள் உள்ளிட்டவற்றை நடத்தி இந்த விழாவை தடபுடலாக கொண்டாடுவது வழக்கம்.
இது மலையாளிகளின் பண்டிகையாக இருந்தாலும், தமிழகத்திலும் விமரிசையாக இது கொண்டாடப்படுகிறது, தமிழகத்தில் செட்டிலாகி விட்ட மலையாள மக்களால்.
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மினி கேரளா. இங்கு மலையாள மக்கள் அதிகம், அதேசமயம், தமிழர்களின் கலாச்சாரத்தை மலையாளிகளும், மலையாள மக்களின் பாரம்பரியப் பழக்கங்களை தமிழர்களும் ஏற்று பழகி வருகின்றனர்.
இங்கு ஓணம் எப்போதும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல கேரள எல்லையில் உள்ள கோவை மாவட்டத்திலும் பல பகுதிகளில் மலையாளிகள் கணிசமாக வாழ்கின்றனர். அங்கும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படும்.
தமிழகத்தில் வந்து செட்டிலாகி விட்ட போதும் தங்களது கலாச்சாரம், பாரம்பரியத்தை மறக்காதவர்கள் மலையாளிகள். அதேசமயம் தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பான பண்டிககைளையும் கூட அவர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடுவதும் உண்டு. அதே போல கேரளத்தில் வாழும் தமிழர்களும் ஓணத்தை அந்த மக்களோடு இணைந்து கொண்டுகின்றனர்.
ஒன் இந்தியாவின் மலையாளம் இணையத்தளத்தில் ஓணம் குறித்து பல தகவல்கள் நிறைந்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications