முகேஷ் அம்பானியை முந்தி பணக்கார இந்தியராக உருவெடுக்கும் அனில் அகர்வால்

வேதாந்தா ரிசோர்ஸஸ் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்களின் அதிபர்தான் அனில் அகர்வால். இவர் இந்தியாவின் கெய்ர் எனர்ஜி நிறுவனத்தை வாங்க தீவிரமாக முயன்று வருகிறார். இதை அவர் செய்து விட்டால் உலகிலேயே பெரும் பணக்கார இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார். இதன் மூலம் அந்த இடத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் முகேஷ் அம்பானி கீழே இறங்கி விடுவார்.
இந்த கையகப்படுத்தல் முடிவடைந்தால், அனில் அகர்வால் நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 67 ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 275 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் சொத்து மதிப்பு அனிலின் வேதாந்தா நிறுவனத்தை விட பெரும் பணக்கார நிறுவனமாக திகழ்கிறது. அதேசமயம், இந்தப் பட்டியலில் டாடா நிறுவனம்தான் முதலிடத்தில் உள்ளது. டாடா நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications