யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு-டெல்லியில் உஷார் நிலை
டெல்லி: யமுனை ஆற்றில் தொடர்ந்து அபாய நிலையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் தலைநகர் டெல்லி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி யமுனையில் அபாய அளவை தொட்டபடி தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. தற்போது 22 செமீ அளவில் யமுனையில் தண்ணீர் ஓடுகிறது. தொடர்ந்து ஹரியானா மாநிலம் ஹத்னிகந்த் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் இந்த நிலை. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் டெல்லிக்கு யமுனையால் ஏற்பட்டுள்ள மிரட்டல் இன்னும் நீங்கவில்லை.
இன்று காலை 8 மணி நிலவரப்படி யமுனை நதியில் விநாடிக்கு 34,600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் யமுனையில் அபாய அளவு நீடிக்கிறது. எனவே டெல்லியில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டுத்துறை தலைமைப் பொறியாளர் டோமர் தெரிவித்துள்ளார்.
எந்தவித நிலைமையையும் சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. 63 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications