தைவானில் அடுத்தடுத்து 6 பூகம்பம்-சுனாமி பீதி

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த ஆறு நிலநடுக்கங்களும் ஏற்பட்டன. தைவானின் தென் கிழக்கில் உள்ள சிலின் கிராமத்திற்கு அருகே இந்த நிலநடுக்கம் கடலில் ஏற்பட்டது.
இதில் ஒரு நிலநடுக்கத்தின் அளவு 5.4 ரிக்டராக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பூகம்பங்கள் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருப்பினும் மக்களிடையே பீதி நிலவுகிறது. சேத விவரம் குறித்து இதுவரை தெரியவில்லை.
சிலின் நகரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. மற்ற 5 நிலநடுக்கங்களும் இலான் நகரில் ஏற்பட்டது. இவை சிறிய அளவில் இருந்தன.
தைவானில் பூகம்பம் புதிதல்ல. தொடர்ந்து அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது சகஜம்தான். இந்த முறை தொடர்ச்சியாக ஆறு முறை பூகம்பம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த 1999ம் ஆண்டு தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டு 2400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications