அதிகரிக்கும் 'நடுத்தர வர்க்கம்'-82% இந்தியர்களுக்கு மாதம் ரூ. 2000 சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் மாதம் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரையே சம்பளம் வாங்குகின்றனர். அதேசமயம், ரூ. 10,000க்கு மேல் பெறுபவர்கள் பணக்காரர்கள் என்ற அந்தஸ்தினைப் பெறுகிறார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஒரு படத்தில் வடிவேலு பெட்டிக் கடைக்குப் போய், ஒரு சிகரெட் கேட்பார். உடனே பக்கத்தில் வெட்டியாக நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், சிகரெட் வாங்குகிற அளவுக்கு வசதி வந்து விட்டதா என்று கேட்பார். இது படத்தில் வரும் காமெடி. ஆனால் ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கையைப் பார்த்தால் இது நிஜம் போலவே தெரிகிறது.

ஆசிய வளர்ச்சி பாங்கி சார்பில், ஆசிய மக்களின் பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆசியாவில் நடுத்தர மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவு்ம், அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நடுத்தர வர்க்கத்தினரின் இடத்தை ஆசியர்கள் பிடித்து விடுவார்கள் என்றும், உலக அளவில் இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அளவில் நுகர்வோர் துறையை தங்களது கையில் வைத்திருப்போர் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள்தான். அதாவது இந்த நாடுகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர்தான் பெருமளவிலான நுகர்வோர்களாக உள்ளனர். இந்த இடத்திற்கு விரைவில் ஆசிய நாடுகள் வேட்டு வைக்கவுள்ளன.

20 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 100 கோடி!:

இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 100 கோடி நடுத்தர வர்க்கத்தினர் இருப்பார்களாம்.

நடுத்தர வர்க்கத்தினர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அவர்களை மேல் நடுத்தர வர்க்கத்தினர், கீழ் மற்றும் மத்திய நடுத்தர வர்க்கத்தினர் என ரயிலில் பெர்த் பிரிப்பது போல பிரித்து வைத்துள்ளனர்.

இதில் மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை சம்பாதிப்பவர்களை கீழ் நடுத்தர வர்க்கத்தினர் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்பவர்களை மத்திய நடுத்தர வர்க்கத்தினர் என்றும், ரூ.5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை மேல்நடுத்தர வர்க்கத்தினர் என்றும் அளவிட்டுள்ளனர்.

இதன்மூலம் மாதம் ரூ. 10,354க்கு மேல் சம்பாதிப்பவர்களை பணக்காரர்களாக்கியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்தியாவைப் பொறுத்தவரை 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் கீழ் நடுத்தர வர்க்கத்தினரே. அதாவது இவர்களது மாதச் சம்பளம் அதிகபட்சம் ரூ. 2,070. இவர்களின் எண்ணிக்கை 22.40 கோடியாகும்.

மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 4.50 கோடி. மேல் நடுத்தர வர்க்கத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். பணக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேராகும். மாதம் ரூ. 10,000க்கு மேல் சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை 0.0009 சதவீதம் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு.

இலங்கையை விட பாக். மோசம்:

இந்தியாவுக்கு அடுத்த அதிக அளவிலான நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்ட நாடு சீனா. அங்கு 63 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர். இலங்கையில் 59 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் ஆவர்.

இதில் கொடுமை என்னவென்றால் பாகிஸ்தான், இலங்கையை விட வெகுவாக பின்தங்கியுள்ளது. அங்கு வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே நடுத்தர வர்க்கத்தினர் ஆவர். மற்ற 60 சதவீதம் பேரும் ஏழைகள் என்பது கவனிப்புக்குரியது.

நீங்கள் ரூ.10,000க்கு மேல் சம்பாதித்தால் பெரும் பணக்காரர்தான் ஆசிய வங்கியின் கணக்குப்படி..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+