வீட்டில் மின்சாரம் பாய்ச்சி கல்லூரி மாணவியை சிறைவைத்த நபர்!
கோபி: கோபிசெட்டிப்பாளையம் அருகே வீட்டுக்குள் நுழைந்து மாணவியைக் கட்டிப் போட்டு, அவர் தப்பிவிடாமல் தடுக்க கதவு, ஜன்னலில் மின்சாரம் பாய்ச்சிய நபர் கைது செய்யப்பட்டார்.
கோபி அருகே தொட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னபழனிச்சாமியின் (47), மனைவி பத்மாவதி, மகள் தேவகி. தேவகி கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர்களது வீட்டின் அருகே வசி்ப்பவர் மகாதேவன் (32). இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை சின்னபழனிச்சாமி வீட்டுக்குச் சென்ற மகாதேவன், அங்கு தனியே இருந்த தேவகியை கத்தியைக் காட்டி மிரட்டி சிறை பிடித்து, கட்டிப் போட்டார்.
தேவகி தப்பிவிடாமல் தடுக்கவும், அவரை யாரும் காப்பாற்ற முடியாமல் தடுக்கவும் கட்டுக் கம்பியால் கதவு, ஜன்னல் பகுதியிலும் வலை போல் கட்டிவிட்டு அதில் மின்சாரத்தை பாய்ச்சிவிட்டு அரிவாளுடன் தேவகி அருகே நின்றார்.
இது குறித்து அறிந்த சின்னபழனிச்சாமி கோபி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மகாதேவனுடன் பேச்சு நடத்தினர்.
ஆனால், அவர் தொடர்ந்து முரண்டு பிடித்தார். இதையடுத்து தேவகியை மீட்க சிவகுமார் என்பவர் முயற்சி செய்தார். அவரை மகாதேவன் அரிவாளால் வெட்டிதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீசாரும், அதிவிரைவுப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
போலீசார் உள்ளே வந்தால் தேவகியை வெட்டிக் கொல்வேன் என்று மகாதேவன் மிரட்டியதால் கோட்டாட்சியர் மணிமேகலை, வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து பேச்சு நடத்தினர்.
பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தேவகியை விடுவித்தார் மகாதேவன். இதையடுத்து மகாதேவன் கைது செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications