விமான கோளாறுடன் தொடங்கிய சசி-சுனந்தா 'ஹனிமூன்'

Subscribe to Oneindia Tamil

Sashi Tharoor and Sunanda
திருவனந்தபுரம்: மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துள்ள புதுமணத் தம்பதிகளான சசி தரூர், சுனந்தா புஷ்கர் ஜோடி தேனிலவுக்குக் கிளம்பிய நேரம் பார்த்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டு திரும்பி வந்தது.

சமீபத்தில் பாலக்காட்டில் வைத்து தங்களது 3திருமணத்தை முடித்துக் கொண்டனர் தரூர், சுனந்தா தம்பதி. இருவருக்கும் இது தலா 3வது திருமணம்.

திருமணத்தை முடித்த பின்னர் திருவனந்தபுரம் வந்த தரூர், சுனந்தா அங்கு நடந்த வரவேற்பில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் தேனிலவுப் பயணமாக திருவனந்தபுரத்திலிருந்து இன்று காலை துபாய் கிளம்பினர்.

அவர்கள் துபாய் செல்ல ஏறிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடர்நது பறக்க முடியாமல் விமானம் திரும்பி வந்தது.

அந்த விமானம் 4.35க்கு கிளம்ப வேண்டியது. ஆனால் 25 நிமிடம் தாமதமாக 5 மணிக்குக் கிளம்பியது. ஆனால் 6 மணிக்குத் திரும்பி வந்து விட்டது. இன்று பிற்பகலில் விமானம் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

துபாய் செல்லும் தரூர், சுனந்தா ஜோடி அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதன் பின்னர் ஸ்பெயினில் தேனிலவு கொண்டாடவுள்ளனர். 54 வயதாகும் தரூர் மற்றும் 48 வயதாகும் சுனந்தாவுக்கு தங்களது முந்தைய கல்யாணங்கள் மூலம் 3 குழந்தைகள் உள்ளனர். இதில் தரூருக்கு ஒரு இரட்டையர் மகன்களும், சுனந்தாவுக்கு ஒரு மகனும் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+