பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு-நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதனால் உத்தரப் பிரதேதம் உள்பட நாடு முழுவதும் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தனது மாநிலத்தில் நிலைமை சமாளிக்க 50,000 துணை ராணுவப் படை வீரர்களை அனுப்ப வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் உததரப் பிரதேசத்துக்கு போதிய படைகள் அனுப்ப்படும் என்று தெரிகிறது. அதே போல நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
அதே போல மாநில அளவில் பாதுகாப்பை பலப்படு்த்த உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி இப்போதே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளார். இதே போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு மற்ற மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications