சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பு: அக்டோபரில் இறுதி விசாரணை- சுப்ரீம் கோர்ட்

சென்னைக்கு அருகே உள்ள சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து தமிழக அரசு அமைத்த நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை உறுதி செய்து அறிக்கை அனுப்பியது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலாவின் உறவினரான இளவரசி உள்ளிட்டோரை பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனம் தலித் நிலத்தில் எஸ்டேட் கட்டியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலாவின் உறவினர்களான சித்ரா மற்றும் இளவரசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிபதிகள் செளகான், சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா ஆஜராகி, நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் அறிக்கையில் அந்த நிலம் ஆதி திராவிடர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடிந்தவுடன், அந்த நிலங்களை ஆதி திராவிடர்களுக்கு திருப்பி வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், எனவே சசிகலாவின் உறவினர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதாடினார்.
இளவரசி, சித்ரா ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கூடுதலாக மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதற்கு நீதிபதிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
மேலும் வரும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடக்கும் என்று அறிவித்து, வழக்கை ஒத்தி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications