திருப்பதி கோவில் ஊழியர் திடீர் தற்கொலை-ஊழல் பின்னணியில் நடந்ததால் பரபரப்பு
ஹைதராபாத் : திருப்பதி வெங்கடாலசபதி கோவில் ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பதி கோவிலில் பெருமளவில் ஊழல் புகார்கள் சரமாரியாக வந்துகொண்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றி வந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் நிர்வாக முறைகேடு, அர்ச்சனை டிக்கெட் ஊழல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமானதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தியது.
அர்ச்சனை டிக்கெட் விற்பனை ஊழல் குறித்து நடத்தப்படும் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவில் ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதற்கு தேவஸ்தான உயர் அதிகாரிகளே காரணம் எனக் கூறி, சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஆராய ஆந்திர முதல்வர் ரோசைய்யா திருப்பதி கோவிலுக்கு நேரில் விரைந்துள்ளார்.
தங்கக் காசுகளில் மோசடி:
இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டு வரும் தங்க நகைகளை, தங்கக் காசுகளாக மாற்றம் செய்வதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பதி கோவிலில் சாமிக்கு நேரிடையாக கொடுக்கப்படும் கிரீடம், பீடாரம் உள்ளிட்டவைகள் அவ்வாறாகவே பாதுகாக்கப்படும். உண்டியல் மூலம் கிடைக்கும் தங்க வளையல்கள், கம்மல்கள் உள்ளிட்ட அணிகலன்கள் வெங்கடாஜலபதி உருவம் பொறித்த தங்க காசுகளாக மாற்றப்பட்டு, கஜானாவிற்கு அனுப்பப்படும்.
இந்நிலையில் காணிக்கையாக வரும் தங்க நகைகளை, கோவில் நிர்வாகத்தில் உள்ள சிலர் எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக மலிவு உலோகத்தில் வெங்கடாஜலபதி உருவம் பொறித்த காசுகளை செய்து கஜானாவில் சேர்ந்து வரவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உருமாற்றம் செய்யப்பட்ட தங்க காசுகளை தணிக்கைக்கு உட்படுத்தப்படாததும் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரி சத்திய நாராயணா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கிய தங்கம், வைரம், வைடூரியம் ஆகியவை மாயமாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஊழல் ஊற்று பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் ஊழியர் தற்கொலையும் சேர்ந்து திருப்பதி கோவில் நிர்வாகத்தின் மீதான சந்தேகப் பார்வைகளை வலுப்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications