ரஜினி, விஜயகாந்த்துடன் அரசியல் பேசவில்லை-ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ரஜினிகாந்த் தனது மகள் கல்யாணத்திற்கு எனக்கு அழைப்பு வைக்க வந்தபோது அவருடன் அரசியல் பேசவில்லை. அதேபோல விஜயகாந்த் பிறந்த நாளின்போது அவருக்கு மாலை அணிவிக்கச் சென்றபோதும் அரசியல் பேசவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
முதல்வர் கருணாநிதியையும், திமுகவையும், திமுக அரசையும் தொடர்ந்து சாடிப் பேசி வந்தார் இளங்கோவன். இதனால் வெகுண்ட முதல்வர் கருணாநிதி, இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலியையே ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
மேலும், திமுக எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் தலைமை வகிக்கப் போவதாக செய்திகள் வந்ததைத் தொடர்ந்து பயந்து போன காங்கிரஸ், இளங்கோவனுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்து வாய்ப்பூட்டு போட்டது. இதனால் 'கூல்' ஆன திமுகவும், எம்.பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிரான கடுமையான நிலையை எடுக்காமல் அடக்கி வாசித்தது.
இருப்பினும் இளங்கோவன் வேறு ரூட்களில் சென்று திமுக தரப்பை தொடர்ந்து 'நோண்டி'க் கொண்டுதான் உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளன்று யாரும் எதிர்பாராத வகையில் தடாலடியாக அவரைப் போய்ச் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அத்தோடு நில்லாமல், தமிழக அரசியலில் வேகமாக வளரும் முக்கியமான அரசியல் தலைவர் என்றும் கூறி திமுக தரப்புக்கு எரிச்சலைக் கொடுத்தார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யா கல்யாணப் பத்திரிக்கையை கொடுப்பதற்காக இளங்கோவனை சந்தித்தார். இதையடுத்து இருவரிடமும் அரசியல் தொடர்பாக பேசினீர்களா என்று இளங்கோவனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கூறுகையில், டமாநிலங்களில் கட்சி பாகுபாடு பாராமல் தலைவர்கள் பழகி வருவதை போல தமிழகத்திலும் அந்த பண்பாடு உருவாக வேண்டும் என்று கருதி விஜயகாந்தை சந்தித்தேன்.
நான் விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அப்போது நாங்கள் அரசியல் பேசவில்லை. கூட்டணி பற்றி பேச நேரம் உள்ளது. இதேபோல நடிகர் ரஜினிகாந்த் எனது இல்லம் வந்து அவரது மகள் திருமண அழைப்பிதழை கொடுத்தார். அவரிடமும் நான் அரசியல் பேசவில்லை என்றார் இளங்கோவன்.
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications