2 வார ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்ற மீனவர்கள்: படகுகள் கடலுக்குச் சென்றன
ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்து கடந்த 2 வாரமாக கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று காலை ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று கடலுக்குள் சென்றனர்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவது தொடர் கதை ஆகிவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால வரையற்ற வேலநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.
அன்மையில் இலங்கையில் இருந்து வந்த மீனவர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இலங்கை மீனவர்கள் குழு சென்னையில் தமிழக மீனவர்கள் தலைவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் மீன் பிடிப்பதில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி ஆலோசனை நடத்தினர்.
இதில் தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையே டோக்கன் பெற்று 347 படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளன.
கடலுக்குச் சென்றவர்களை சர்வதேச எல்லையை தாண்டாமல், மாரிடைம் சட்டத்தை மதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட மற்ற மீனவர்களும் இன்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications