கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற மனைவி, கூலிப்படை ஆயுள் தண்டனை
திருப்பூர்: திருப்பூர் அருகே கூலிப்படையை ஏவி கணவனைக் கொலை செய்த மனைவிக்கும், கூலிப்படைக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் அருகே உள்ளது கூலிப்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கவிதா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவின் கணவர் செல்வராஜ் அங்குள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இது குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் செல்வராஜின் மனைவி கவிதாவிற்கு கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரமுற்ற கவிதா கூலிப்படையை ஏவி கணவனைப் படுகொலை செய்ததாகவும் தெரிய வந்தது.
இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகாலமாக திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ கவிதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சிவசங்கரன், பாலமுருகன், ராஜா, முத்துக்குமார் ஆகிய 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications