கன்னியாகுமரி-ராமேஸ்வரம் ரயில் தடம்புரண்டது: தென் மாவட்ட ரயில் சேவை பாதிப்பு
சாத்தூர்: கன்னியாகுமரி, ராமேஸ்வரம் இடையிலான ரயில் சாத்தூர் அருகே தடம் புரண்டது. இதையடுத்து தென் மாவட்ட ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் விரைவாக நடப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. டிரைவர்கள் குமாரசாமி, பெஞ்சமின் ஓட்டி வந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு இரவு 1 மணியளவில் ரயில் வந்தது.
பின்னர் சாத்தூரிலிருந்து கிளம்பி 1.06 மணிக்கு வெங்கடாஜலபுரம் எனும் இடத்தில் வந்த போது, ரயில் தண்டவாள இணைப்பு சுமார் இரண்டு அடி நீளத்திற்கு உடைந்தது. இதனால் ரயில் என்ஜின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகி, சுமார் 800 மீட்டர் தொலைவுக்கு வெளியே சென்றது. ஆனால் டிரைவர்களின் சாமர்த்தியத்தால் ரயில் பெட்டிகள் கவிழவில்லை. டிரைவர்களின் சமயோஜிதம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயிலில் சுமார் 1500 பயணிகள் பயணித்தனர். அவர்களில் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மதுரையிலிருந்து ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தை சீரமைக்குப் பணிகள் நடந்து வருகின்றன.
ரயில் தடம்புரண்டதால், தென்பகுதிக்கு வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தென் மாவட்டத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டன. கொல்லம்-மதுரை பாசஞ்சர் ரயில் சாத்தூரில் நிறுத்தப்பட்டது.
கொல்லம்-மதுரை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆங்காங்கு ரயில்கள் நிறுத்தப்பட்டதாலும், ரத்து செய்யப்பட்டதாலும் பயணிகள் பெரும் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில் இருந்து விருதுநகர் வழியாக இன்று காலையில் செல்லும் தூத்துக்குடி மங்களூர், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், தென்காசி பாசஞ்சர் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. காலை 9 .45 க்கு மேல் ஒவ்வொரு ரயில்களாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தடம் புரண்ட ரயிலில் பயணம் செய்த பயணிகளை பத்திரமாக அனுப்பி வைப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை என்று தெரிகிறது. விருதுநகர் அதிகாரிகளிடம் கேட்டால், இதுகுறித்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்றனர்.
சாத்தூர் அருகே உள்ள இந்த ரயில் பாதை நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இது போன்று ரயில் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பாதையில் நாள் ஒன்றுக்கு 30 ரயில் வந்து செல்கிறது. குறிப்பாக சரக்கு ரயில்களே அதிகம். இநத தண்டவாளம் சுமார் 80 ஆண்டுகள் பழமையானவை. எனவே பலம் இழந்து காணப்படுகிறது. இது குறித்து வர்த்தக சங்கத்தினர் ரயில்வே துறைக்கு ரயில்பாதை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
இந்த விபத்து தற்செயலானதுதான், இதில் சதி ஏதும் இல்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிக்கு வந்த ஊழியர் பலி:
இதற்கிடையே, தடம் புரண்ட என்ஜினை மீட்பதற்காக பணியாளர்களுடன் வந்த ஆட்டோ மீது கார் மோதியது. இதில் கேங்கேமன் மதுர வீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உதவி என்ஜினியர் ராமசுப்ரமணியன், டிராலி மேன் மாரியப்பன் ஆகியோர் காயமடைந்து மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications