மீண்டும் கொடநாடு எஸ்டேட்டுக்கு போய்விட்ட ஜெயலலிதா
சென்னை: கடந்த சில மாதமாக திமுக அரசுக்கு கடும் டென்ஷனைக் கொடுத்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திடீரென கொடநாடு கிளம்பிப் போய் விட்டார். இதனால் அதிமுகவினர் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பல மாத கொடநாடு வாசத்திற்குப் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார் ஜெயலலிதா. வந்த வேகத்தில் கோவையில் பிரமாண்டக் கண்டனக் கூட்டத்தைக் கூட்டி திமுக தரப்பை திகிலடைய வைத்தார்.
அந்த திகில் மாறாத நிலையில் திருச்சியில் இன்னொரு பிரமாண்ட கூட்டத்தைப் போட்டார். அடுத்து மதுரையிலும் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தரப்பு கூறியிருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் இன்று திடீரென கொடநாடு கிளம்பிப் போயுள்ளார் ஜெயலலிதா. அவருடன் வழக்கம் போல தோழி சசிகலாவும் போயுள்ளார்.
இன்று முற்பகல் விமானம் மூலம் கோவை சென்ற ஜெயலலிதாவை அதிமுக பிரமுகர்கள் கும்பிடு போட்டு வழியனுப்பி வைத்தனர்.
தொடர் கூட்டங்களால், படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த அதிமுகவினருக்கு, ஜெயலலிதாவின் இந்த திடீர் கொடநாடு பயணம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜெயலலிதா மீண்டும் எப்போது மலையிலிருந்து இறங்கி வருவார் என்பது தெரியவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications