ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 10 பேர் கொண்ட கும்பல் 29 சவரன், ரூ.2 லட்சம் கொள்ளை
சென்னை: கூடுவாஞ்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ரூ. ஆறரை லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றள்ளது.
கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பரமசிவம் (46). இவர் தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை அருகேயுள்ள உறவினர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தனது மனைவி பூவதி (35) மற்றும் மகள், மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அந்த பண்ணை வீட்டிற்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பரமசிவத்தின் தலையில் அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயக்கம் அடைந்து விட்டார். மேலும், அந்த கும்பல் பரமசிவத்தின் மனைவியையும் அடித்து உதைத்தனர்.
அதன் பிறகு வீட்டில் இருந்து 29 சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.2 லட்சம், வெள்ளி பொருட்கள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள நில பத்திரங்கள் ஆகியவற்றை அந்த கொள்ளை கும்பல் திருடிக் கொண்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்று விட்டது.
இந்த சம்பவம் குறித்து பரமசிவம் போலீசில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications