ஜெ. பரிசுப் பொருள் வழக்கில் இனி வாய்தா தர முடியாது-சிபிஐ கோர்ட் நீதிபதி கண்டிப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான பரிசுப் பொருள் வழக்கில் இனியும் வாய்தா தர முடியாது என்று சிபிஐ கோர்ட் நீதிபதி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 1992ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பரிசாக ரூ. 2 கோடி அளவுக்கு காசோலைகள் கொடுக்கப்பட்டன.
இவற்றை தனது வங்கி கணக்கில் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. சுமார் 2 கோடி மதிப்புள்ள காசோலைகளை தனது வங்கி கணக்கில் வரவு வைத்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா, அப்போதைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு (இவர் இப்போது திமுகவில் இருக்கிறார்) ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று 3 பேரும் சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அதேசமயம், 10 ஆண்டுகள் காலதாமதத்துடன் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி 3 பேரும் தாக்கல் செய்த மனு சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கை வேறுதேதிக்கு தள்ளி வைக்குமாறு கோரினார். இதை ஏற்ற நீதிபதி ரவீந்திரன் வருகிற 14ம் தேதி தள்ளி வைத்தார். அதேசமயம், மீ்ண்டும் வாய்தா தர முடியாது என அவர் கண்டிப்புடன் கூறினார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications