கொடநாடு எஸ்ட்டேடில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் முற்றுகை

கோவை, திருச்சி என படு சுறுசுறுப்பாக அதிமுகவினரை முடுக்கி விட்ட ஜெயலலிதா திடீரென நேற்று கொடநாடு கிளம்பி வந்து விட்டார். சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் கொடநாடு எஸ்டேட்டிற்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.
வழியெங்கும் அதிமுகவினர் வரவேற்பு:
வழியில் நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் மாவட்ட அதிமுக செயலர் செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதையடுத்து கொட்டகம்பை பகுதியில் கொணவக்கரை ஊராட்சித் தலைவர் வீரமுத்து தலைமையில் ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அரவேணு பகுதியில் சக்கத்தா கணேஷ் தலைமையிலும், டானிங்டன் பகுதியில் சிடிசி ஜப்பார் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் எஸ்.கைகாட்டி, குருக்கட்டி, ஈளாடா ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடநாடு எஸ்டேட் நுழைவாயிலுக்கு வந்த ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ், அதிமுக பிரமுகர்கள் எல்.மணி, கே.கே.மாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். வழியெங்கும் அளிக்கப்பட்ட வரவேற்புகளில் பொதுமக்கள் அளித்த பூங்கொத்துகளை ஜெயலலிதா பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் 40 நாள்கள் வரை தங்கியிருந்து முக்கிய அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.
அதிமுகவினர் திடீர் முற்றுகை:
இந்த நிலையில் இன்று அங்கு நீலகிரி மாவட்டம் குந்தா ஒன்றியச் செயலாளர் புத்திசந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்திச்சந்திரனை நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் வேண்டும் என்றே நீக்கியுள்ளார். அவரது நீக்கத்தை ஜெயலலிதா ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கூட்டத்திற்கு வருவாரா?
கொடநாட்டில் 40 நாட்கள் ஜெயலலிதா தங்கப் போவதாக கூறப்படுவதால் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை கலந்து கொண்டாலும் ஹெலிகாப்டரிலேயே வந்து ஹெலிகாப்டரிலேயே திரும்பிச் செல்வார் என்று தெரிகிறது.
விமானம் தாமதம்:
முன்னதாக ஜெயலலிதா நேற்று காலை 11.15 மணிக்கு தனி விமானத்தில் கோவைக்கு செல்வதாக இருந்தது. ஆனால் தாமதமாக மதியம் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சசிகலா மற்றும் உதவியாளர், பணிப்பெண்கள். பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர். பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் கோடநாட்டுக்கு சென்றார்.
விமான நிலையத்தில் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications