கருணாநிதிக்கே காவல்துறை மீது நம்பிக்கை இல்லை-பாஜக சொல்கிறது
சென்னை: காவல்துறையை தனது பொறுப்பி்ல் வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கே காவல்துறை மீதான நம்பிக்கை போய் விட்டது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் மீது முதல்வர் கருணாநிதிக்கு நம்பிக்கை போய்விட்டது.
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து பாஜக எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு வேளை கூட்டணி இல்லாவிட்டால், எங்களது சொந்த பலத்தில் சில தொகுதிகளில் போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்வோம்.
கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைக்கு பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். இதேபோல் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசு கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இந்திய உணவுக்கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உள்ள உணவு தானியங்கள் பாழாகி இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதனை பாதுகாத்து ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தற்போது 9 ஆயிரத்து 144 டன் அரிசியும், 2 ஆயிரத்து 446 டன் கோதுமையும் பாழாகி இருப்பதாக தெரிகிறது. எதிர்காலத்தில் மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications