திமுகவின் வெற்றிக்கு துணை போகும் விஜயகாந்த்: பாஜக

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: தனது தலைமையில் தனி கூட்டணி அணி அமைக்கப் போவதாக அறிவித்திருப்பதன் மூலம், திமுகவின் வெற்றிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் துணை போகிறார் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், தேமுதிக தலைமையில் தனி அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

திமுகவின் வெற்றிக்கு உதவி செய்யும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். ஆனால், அதனையும் மீறி திமுக தோற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் திரைப்படத் துறையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் அனைத்துத் துறைகளும் அவர்களின் கட்டுக்குள் வந்து விடும்.

எந்தத் தொழிலதிபரும் தமிழகத்தில் தொழில் செய்யவே முடியாது. எனவே, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக அனைத்துக் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து அணி திரள வேண்டும்.

கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் எந்தக் கட்சியுடனும் பேசவில்லை. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குள் நுழைவோம். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

கச்சத் தீவை மீட்காவிட்டால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, கச்சத் தீவை மீட்க அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+