நெல்லை அருகே மல்லிகைக் தோட்டத்தில் பண்ணையார் கழுத்தறுத்துக் கொலை
நெல்லை: நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு மல்லிகை தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பண்ணையார் ஓருவர் படுகொலை செய்யப்பட்டார்.
பணகுடி அருகே உள்ள பழவூரை சேர்ந்தவர் பிரமநாயகம் மகன் குருசாமி. இவர் தற்போது குடும்பத்துடன் நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் மூன்றடைப்பு அருகே உள்ளது. அதி்ல் மல்லிகை பயிரிட்டுள்ளார். சித்த மருத்துவம் படித்துள்ளதால் அந்த பகுதி மக்களுக்கு மருத்துவமும் செய்துள்ளார்.
தினமும் காலை இவரது மனைவி ராமையன்பட்டியில் இருந்து தோட்டத்துக்கு வருவார். மாலையில் வீட்டுக்கு திரும்பி விடுவார். நேற்று மாலை வீடு திரும்பியவர், இரவில் தனது கணவர் செல்போனுக்கு பேசியுள்ளார். ஆனால் செல்போன் எடுக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பகவதி இன்று காலை பக்கத்து வாயல்காரரை போனில் அழைத்து தங்கள் தோட்டத்துக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குருசாமி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் நிசார் தலைமையில் போலீசார் அங்கு சென்று குருசாமி உடலை மீட்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications