நியூசிலாந்தில் மிக பயங்கர நிலநடுக்கம்-பலத்த சேதம்
கிரைஸ்ட்சர்ச் நகருக்கு மேற்கே 45 கி.மீ. தூரத்தில் அதிகாலை 4.35 மணிக்கு நிலத்துக்கடியில் 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் ஆக்லாந்துக்கு அடுத்த பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பல இடிந்து விழுந்துள்ளன.
இப் பகுதியி்ல் உள்ள சிறிய மலைப் பகுதியி்ல் இருந்து ஏராளமான பாறைகள் உருண்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து விழுந்தன.
ஆனால், இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சிலர் மட்டுமே காயமடைந்ததாக தகவல்கள் வருகின்றன.
நிலநடுக்கத்தையடுத்து நகரில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது. பல இடங்களில் எரிவாயு குழாய்கள் வெடித்துள்ளன, சாலைகள் பிளவுபட்டுள்ளன.
கீறல் விழுந்த கட்டடங்களுக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த நகரில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விமானம் விழுந்து 9 பேர் பலி:
இந் நிலையில் நியூசிலாந்தில் ஸ்கை டைவிங் குழுவினர் சென்ற சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலியாயினர்.
நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பாக்ஸ் கிளேசியர் என்ற பனிமலைப் பகுதியில் இந்த விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கியது.
குஜராத்தில் லேசான நிலநடுக்கம்:
இந் நிலையில் குஜராத் மாநிலத்தின் மெஹசானா பகுதியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை 8.40 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.9 புள்ளிகளாகப் பதிவானது. இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications